Wednesday 20 June 2012

துடிக்கும் தமிழ்த்தாய்…

என் தமிழ்த்                                         
தாயின்...
கதறல் இங்கே                                                         
உந்தன் காதில்
கேட்கிறதா…

தன்னுயிர் விழுங்க
ஆங்கிலஅரக்கன்
வருவது கண்டு…
துடிக்கின்றாளே
தெரிகிறதா…

பலமொழி அறிவதில்
பாவமில்லை…
உன் தாய்மொழி
தவிர்ப்பது
பெரும்பாவம்…

இனிக்கும் தமிழை
தவிர்க்கும் தமிழா
உன் நாவினிக்கத்
தமிழ் பேசு…
இனியநாதம் பிறக்கும்
அதில் மூழ்கு…

இனிய தமிழ்விதையே
இன்றே உணர்வாய்…
தமிழ்த்தாய்
உயிரைக் காத்திடும்
கடமை…
உன் வாய்மொழிப்
பேச்சினில்
உண்டென்றே...

-----கீர்த்தனா-----

2 comments:

  1. ‎"தமிழுக்கும் அமுதென்று பெயர்" என்று எழுதிய‌ அந்த‌ பாரதி இன்று உயிரோடிருதால்!.. "இன்பத் தமிழ் அந்த கீதாவின் கவிதைக்கு நேர்" என்று அதன் இரண்டாவது வரியை எழுதியிருப்பான்!!!..

    ReplyDelete