Saturday, 30 June 2012

இரட்டை இதயங்கள்...












கள்ளமில்லா
வெள்ளை
அன்னங்களின்
முத்தமிடலில்…
வரையப்பட்ட
இதயமது…
நீரினிலும்
பளிங்காய்
பிரதிபலிக்க…

இயற்கையன்னை
வரைந்து வைத்த...
இரட்டை இதயங்களின்
அற்புத அழகினை
அள்ளிப்பருகி…

ஒளிச்சிரிப்பினை
வீசியபடியே…
லயித்து நின்றான்
கதிரவனும்…
தன்னிலை மறந்து
சொக்கிப் போய்...

----கீர்த்தனா----
Vis flere

2 comments:

  1. அந்த கதிரவன் தனை மறந்து அங்கே சொக்கி நின்றது.. அந்த அன்னப் பறவைகளை பார்த்ததினாலா!!.. இல்லை.. இந்த அழகுக் கவிதையினை படித்ததினாலா??.. இன்னும் புரியவில்லை!.. இக் கவி படித்த மயக்கத்தில் இருக்கும் எனக்கு!!..

    ReplyDelete
  2. MIGA MIGA NANDRIKAL ANNAA.. :)

    ReplyDelete