Sunday, 10 June 2012

கவிதைக்காதல்

கவி மழையில்
காதல் சொல்லி...
களிப்பினிலே
நனைய வைத்தாய்...
சிறு நொடியில்
உயிர் தந்து
உன்னவளானேன்
நான்

கவியை மழையாய்
பொழிந்தவனே 
இன்றுஒரு சில
வார்த்தை மட்டும்..
உதிர்ப்பதேனோ

எந்தன் உயிராகவே
இன்னும் நீ !
வறண்டு விட்டதோ
உன்னுள் பெருகிய
காதல் மழை
இன்னும் மழை
வருமா  எனத்
தவிப்புடன்  நான்…
------கீர்த்தனா------