Saturday, 30 March 2013

மகிழ்விப்பின் சுவை

உள்ளுக்குள் உணர்வுகள் அழலாம்
உடைந்த மனத்தை கண்ணாடியாய்
உன் முகம் காட்டலாம்...
உன்னுள்ளே புதைத்துக் கொள்,
உணர்வின் காயங்கள் அத்தனையும்...

உனக்கான உன்னைச் சுற்றியிருக்கும்
உன்னத உறவுகள் அனைவரையும்
உடைப்பெடுக்கும் உனதன்பினில் நீந்த வை..
உருவாகும் போது என்ன கொண்டுவந்தோம்?
உருவிழந்து போகும் போது கொண்டு செல்ல..
உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே...
உளமாரப் பிழை பொறுத்து...
உண்மை அன்பின் இலக்கணமாய்...
ஊர் போற்றும் உத்தமராய் நாமெல்லாம்...

---கீர்த்தனா---

அன்பின்,

மகிழ்விப்பின் சுவையே நிலையானது...

Tuesday, 26 March 2013

வளர மனமின்றி...

வானம் விட்டு
இறங்க மறுக்கும்
நிலவை
கை நீட்டி அழைக்கும்
குழந்தையின்
பிஞ்சு மனத்துடன்
அடம் பிடித்தபடி
இன்னும்
வளர்ந்த குழந்தையாய்
வளர மனமின்றி...

---கீர்த்தனா---

Monday, 25 March 2013

கொடுப்பதில் கோடி இன்பம்


Bilde: கொடுப்பதில் கோடி இன்பம்...
*****************************

ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...  

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---
ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்...
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---

Thursday, 21 March 2013

காற்று வெளியிடை....பிரமாண்டமாய்
இறக்கை விரித்து...
மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து...
சிறிது சிறிதாய் வேகமெடுத்து...

பெருவேகத்துடன் ஓடி ஓடி...
சரக்கென ஓர் உந்தலுடன்...
மேல்நோக்கி மேல்நோக்கி...
காற்று வெளியிடை
மிதந்து மிதந்து...
வான் கடலில் - எம்மையும்
சுமந்து சுமந்து...
நீச்சலடித்தது இயந்திரப்பறவை!

இறக்கை இல்லை
இருப்பினும் பறந்தேன்
தொட்டு விடும் தூரத்தில்
பிறை நிலாக் கண்டேன்!
தொட முடியாத் தூரத்தில்
பூமித் தாய் கண்டேன்!

அள்ளி இறைத்த நட்சத்திரங்கள்
வானிலே வெள்ளிப்பூக்களாய்...
மினுக்கென எரிந்த மின்விளக்குகள்
புவியிலே தங்கப்பூக்களாய்...
தக தகத்த பிறைநிலா
வரைந்து வைத்த ஒளிக்கீற்றாய்...
அண்டசராசரம் முழுவதும்
ஒளிப்புள்ளிகள் நிறைந்து...
விடியலுக்கான கட்டியங் கூறி...

---கீர்த்தனா---

Wednesday, 13 March 2013

எத்தடை வரினும்.....


Bilde: எத்தடை வரினும்.....
*********************
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---

Monday, 11 March 2013

காரிருள்!

மழைக்காலக்
கார்மேகங்களாய்
எண்ணங்களிலும்
காரிருள்!
வண்ணம் பூச
முயல்கிறேன்
வானவில்
நினைவுகளால்
கடந்து சென்ற
இனியவை மீட்டி...

---கீர்த்தனா---

உணர்வுள்ள பொம்மைகளாய்...

பொம்மலாட்டம் ஆடுகின்றோம்...
பொழுதெல்லாம் நாமெல்லாம்...
ஒரு நுனியில் எமைப் பிணைத்து
மறு நுனியைத் தான் பற்றி,
நூலின் அசைவில் அவன் ஆட்டிடும்...
தோலின் அழகணி போர்த்திய
பொம்மைகளாய்....உணர்வுள்ள
பொம்மைகளாய் நாமிங்கு...
மாய உலகின் மாய வலையில்
சிக்கியது புரிந்தும் எதையோ தேடி
உளம் மிக வருந்தி....நிம்மதி
இழப்பில்....உழன்றபடி.....

---கீர்த்தனா---

Friday, 8 March 2013

பெண்மையின் வியாபகம்....

மலைகளாய் உயர்ந்து...
கடலாய்ப் பரந்து விரிந்து...
நதிகளாய்ப் பிரவகித்து...
பூமியாய்ப் பாரம் தாங்கி...
பிரபஞ்ச இயக்கத்தில்...எங்கெங்கும்
பெண்மையின் வியாபகம்....

கருவறைத் தாய் நமதன்னை!
கருணைத் தாய் பலரன்னை! ( தெரசா )
கண்ணுள் தாங்கும் சகோதரி!
நெஞ்சினுள் சுமக்கும் தாரம்!
கொஞ்சி விளையாடும் செல்லமகள்!
எங்கேயும்... எங்கேயும்...
பெண்மையின் உண்மை பிணைந்து...
ஆண்மையின் போற்றுதலில்
மேன்மையின் உச்சம் பெற்று....

அனைத்து மேன்மைமிகு மகளிர்கட்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்!!!!

---கீர்த்தனா---

Tuesday, 5 March 2013

சிருஷ்டித்த கவியழகை...


Bilde: சிருஷ்டித்த  கவியழகை...
**************************
பச்சைப் பாய் தனை
மெத்தெனெ விரித்து வைத்தான்!
நீலக் கம்பளந் தனை
நீளமாய் விரித்து வைத்தான்!
பஞ்சுப் பொதிகள் தனை
அந்தரத்தில் மிதக்க வைத்தான்!
வண்ணந் தீட்டி இறக்கைகளை
வானிலே பறக்கச் செய்தான்!

வான வீதி தனில்...
வெண்ணையை உருண்டை செய்து,
தண்மையாய் உலவ விட்டான்!
மேக மெத்தையின் மேல்....
கோடி கோடி மல்லிப் பூக்களை,
ஓடி ஓடிக் கொட்டி வைத்தான்!
பூமகள் மடியின் மேல்...
வானவில்லை உருத்தி உருத்திப்
பூக்களாய்த் தெளித்து வைத்தான்!

படமெடுக்கும் பாம்பாய்
நெருஞ்சி முள்ளும்...
கூர்மை தீட்டிய கத்தியாய்
குத்தும் கல்லும்...
குடை விரித்தாடும்
முள்ளுப்பற்றையும்...
போகும் பாதையில்
அவன் தான் படைத்தான்!!

குறுக்கிடும் இன்னல்கள் 
அனைத்தும் விரட்டி...
கவிஞனாய் அவன் சிருஷ்டித்த 
கவியழகை...வண்ணக் கவியழகை...
ஆனந்தமாய்...மிக ஆனந்தமாய்...
இனிதாக அனுபவிப்போம்... 

---கீர்த்தனா---
பச்சைப் பாய் தனை
மெத்தெனெ விரித்து வைத்தான்!
நீலக் கம்பளந் தனை
நீளமாய் விரித்து வைத்தான்!
பஞ்சுப் பொதிகள் தனை
அந்தரத்தில் மிதக்க வைத்தான்!
வண்ணந் தீட்டி இறக்கைகளை
வானிலே பறக்கச் செய்தான்!

வான வீதி தனில்...
வெண்ணையை உருண்டை செய்து,
தண்மையாய் உலவ விட்டான்!
மேக மெத்தையின் மேல்....
கோடி கோடி மல்லிப் பூக்களை,
ஓடி ஓடிக் கொட்டி வைத்தான்!
பூமகள் மடியின் மேல்...
வானவில்லை உருத்தி உருத்திப்
பூக்களாய்த் தெளித்து வைத்தான்!

படமெடுக்கும் பாம்பாய்
நெருஞ்சி முள்ளும்...
கூர்மை தீட்டிய கத்தியாய்
குத்தும் கல்லும்...
குடை விரித்தாடும்
முள்ளுப்பற்றையும்...
போகும் பாதையில்
அவன் தான் படைத்தான்!!

குறுக்கிடும் இன்னல்கள்
அனைத்தும் விரட்டி...
கவிஞனாய் அவன் சிருஷ்டித்த
கவியழகை...வண்ணக் கவியழகை...
ஆனந்தமாய்...மிக ஆனந்தமாய்...
இனிதாக அனுபவிப்போம்...

---கீர்த்தனா---

Monday, 4 March 2013

உள்ளம் வலிக்காதோ?

வன்புணர்வு கொள்ளும்
வல்லினமே!!!
மென்னுணர்வு கொண்ட
மெல்லினங்கள்!!!
தன்னுணர்விழந்து...
தன்னுயிரிழந்து...
விண்ணுலகம் செல்கையில்...
உம்முணர்வு உம்மை,
உள்ளச்சாட்சி கொண்டு
உறுத்தாதோ?
உள்ளம் வலிக்காதோ?
மனக்கூண்டில் நிறுத்தாதோ?
வன்மை உணர்வுகள்,
வக்கிர உணர்வுகளின்
பிறப்பிடம் புரியாமல்
நெஞ்சம் வலியுடன்....
எழுப்பும் வினாக்கள்...

---கீர்த்தனா---