Tuesday, 5 March 2013

சிருஷ்டித்த கவியழகை...


Bilde: சிருஷ்டித்த  கவியழகை...
**************************
பச்சைப் பாய் தனை
மெத்தெனெ விரித்து வைத்தான்!
நீலக் கம்பளந் தனை
நீளமாய் விரித்து வைத்தான்!
பஞ்சுப் பொதிகள் தனை
அந்தரத்தில் மிதக்க வைத்தான்!
வண்ணந் தீட்டி இறக்கைகளை
வானிலே பறக்கச் செய்தான்!

வான வீதி தனில்...
வெண்ணையை உருண்டை செய்து,
தண்மையாய் உலவ விட்டான்!
மேக மெத்தையின் மேல்....
கோடி கோடி மல்லிப் பூக்களை,
ஓடி ஓடிக் கொட்டி வைத்தான்!
பூமகள் மடியின் மேல்...
வானவில்லை உருத்தி உருத்திப்
பூக்களாய்த் தெளித்து வைத்தான்!

படமெடுக்கும் பாம்பாய்
நெருஞ்சி முள்ளும்...
கூர்மை தீட்டிய கத்தியாய்
குத்தும் கல்லும்...
குடை விரித்தாடும்
முள்ளுப்பற்றையும்...
போகும் பாதையில்
அவன் தான் படைத்தான்!!

குறுக்கிடும் இன்னல்கள் 
அனைத்தும் விரட்டி...
கவிஞனாய் அவன் சிருஷ்டித்த 
கவியழகை...வண்ணக் கவியழகை...
ஆனந்தமாய்...மிக ஆனந்தமாய்...
இனிதாக அனுபவிப்போம்... 

---கீர்த்தனா---
பச்சைப் பாய் தனை
மெத்தெனெ விரித்து வைத்தான்!
நீலக் கம்பளந் தனை
நீளமாய் விரித்து வைத்தான்!
பஞ்சுப் பொதிகள் தனை
அந்தரத்தில் மிதக்க வைத்தான்!
வண்ணந் தீட்டி இறக்கைகளை
வானிலே பறக்கச் செய்தான்!

வான வீதி தனில்...
வெண்ணையை உருண்டை செய்து,
தண்மையாய் உலவ விட்டான்!
மேக மெத்தையின் மேல்....
கோடி கோடி மல்லிப் பூக்களை,
ஓடி ஓடிக் கொட்டி வைத்தான்!
பூமகள் மடியின் மேல்...
வானவில்லை உருத்தி உருத்திப்
பூக்களாய்த் தெளித்து வைத்தான்!

படமெடுக்கும் பாம்பாய்
நெருஞ்சி முள்ளும்...
கூர்மை தீட்டிய கத்தியாய்
குத்தும் கல்லும்...
குடை விரித்தாடும்
முள்ளுப்பற்றையும்...
போகும் பாதையில்
அவன் தான் படைத்தான்!!

குறுக்கிடும் இன்னல்கள்
அனைத்தும் விரட்டி...
கவிஞனாய் அவன் சிருஷ்டித்த
கவியழகை...வண்ணக் கவியழகை...
ஆனந்தமாய்...மிக ஆனந்தமாய்...
இனிதாக அனுபவிப்போம்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment