பிரமாண்டமாய்
இறக்கை விரித்து...
மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து...
சிறிது சிறிதாய் வேகமெடுத்து...
பெருவேகத்துடன் ஓடி ஓடி...
சரக்கென ஓர் உந்தலுடன்...
மேல்நோக்கி மேல்நோக்கி...
காற்று வெளியிடை
மிதந்து மிதந்து...
வான் கடலில் - எம்மையும்
சுமந்து சுமந்து...
நீச்சலடித்தது இயந்திரப்பறவை!
இறக்கை இல்லை
இருப்பினும் பறந்தேன்
தொட்டு விடும் தூரத்தில்
பிறை நிலாக் கண்டேன்!
தொட முடியாத் தூரத்தில்
பூமித் தாய் கண்டேன்!
அள்ளி இறைத்த நட்சத்திரங்கள்
வானிலே வெள்ளிப்பூக்களாய்...
மினுக்கென எரிந்த மின்விளக்குகள்
புவியிலே தங்கப்பூக்களாய்...
தக தகத்த பிறைநிலா
வரைந்து வைத்த ஒளிக்கீற்றாய்...
அண்டசராசரம் முழுவதும்
ஒளிப்புள்ளிகள் நிறைந்து...
விடியலுக்கான கட்டியங் கூறி...
---கீர்த்தனா---
விடியலின் வருகையை அழகாக வருணித்தீர்கள். கவிதையின் கடைசி வரி குறைகிறதே!
ReplyDeleteMikavum nandri... vidiyalukku kaddiyam koori kaathiruppu... athanaal kuraikirathu :)
ReplyDeleteகவிதையின் காட்சியமைப்பு நன்று...
ReplyDelete