Saturday, 9 June 2012

உளமார கசிந்துருகி...













இனிதான
உறவொன்று
எனைத்தேடி
வந்தபோது...
முன்ஜென்மம்
பிரிந்தசொந்தம்
மீண்டுமிங்கே
கிடைத்தததைப்
போல்...

உளமார
கசிந்துருகி...
அன்பாலே
உயிர்கொடுத்து...
நெஞ்சமெலாம்
உன்னை நிரப்பி
எனக்கேயான
உனதன்பென்று
நானிருக்க..

மனமுடைத்து
உயிருறிஞ்சிக்
குடிப்பதைப்போல்
தவிக்கவைத்தாய்
எனையிங்கு...

பெருக்கெடுக்கும்
உணர்வுகளைக்
கொன்று நீ
புதைத்திடாதே..
உனையன்றி
என்னுள்ளே
வேறேதுமில்லை
அன்பே…….
 




-------கீர்த்தனா--------

2 comments:

  1. தன்னுயிரை தான் மாய்க்க..
    விரும்புமோ அவ்வுயிர்..
    உன்னுயிரில் உயிராக‌..
    உன்னுடனே உள்ளவரை!..

    தேடிவரும் அவ்வுறவு...
    மாலைக் கவிதைகளாய் - நீ
    வாழ்ந்திருக்கும் கனவுலகில்..
    தினமும் கண்ணே!..

    உங்கள் உணர்வூட்டும் கவிதையை படித்ததும்.. அதற்கு விடை தேடிச் சென்ற சிந்தனையில் உதித்த.. சில வரித்துளிகள் இவை!..

    தேவன் பாலக்கிருஷ்ணன்

    ReplyDelete
  2. rommmba thx sir...arumayaana kavi varikal...pinnoodaththukku nandri sir.. :)

    ReplyDelete