Tuesday 19 June 2012

ஏகாந்தமாய் அமர்ந்து...















தங்கச்சூரியனின்
ஒளிக்குழம்பை
உள்வாங்கி…
உருக்கிவார்த்த                                                                                    
பொன்னாய்த்
தகதகக்கும்…
தங்கநீரேரிக்
கரையினிலே…

சிங்காரமாய்
ஒற்றைக்கால்                                                                            
தவமிருக்கும்
வெண்கொக்குகள்
எதற்காகவோ
காத்திருக்க…

அங்குமிங்கும் பறக்கும்
பட்சிகள் எல்லாம்
இதமாய்...மெலிதாய்
இசையெழுப்ப….

காற்றின் தழுவலிலே
குடைவிரித்த
மரங்களெல்லாம்…
மெதுவாக அசைந்தாட…

ஏகாந்தமாய் அமர்ந்து
இயற்கையின் அழகினை
அள்ளிப்பருகினேன்…
படைத்தவனின்
செல்ல இரசிகையாக…

-----கீர்த்தனா-----

3 comments:

  1. அந்த இயற்கையை இரசிக்கும் இரகசியத்தை தெரிந்து கொண்டவர்களை.. அந்த‌ இயற்கையே கவிஞர்களாக்குகிறது என்பதற்கு நீங்களே ஒரு சிறந்த உதாரணம்!... இயற்கையின் வர்ண ஜாலங்களை உங்கள் கவிதையில் இயல்பாக‌ வரைந்த உங்கள் திறமை பாராட்டுக்குரியது!... வாழ்த்துக்கள் கீதா!..

    ReplyDelete
  2. mm iyarkkai enakku migavum pidikkum Sir Thaank u Sir.. :)

    ReplyDelete