Sunday, 24 June 2012

எனக்கும்…உயிருண்டு...

அன்பு மனிதா...எனை
வெட்ட முன்னே…
உன்கையில்
போட்டுப்பார்
ஒரு கீறல்…
உன் வலிதான்         
என்னிடமும்…

வளர்கின்றேனே
தெரியவில்லையா…
எனக்கும் உயிர்
உண்டென்பது…
மரமென்று உவமை
சொல்லாதீர்
உணர்வற்ற
மனிதனை…
அது மிகத்தவறு...

புரிந்து கொள்வாய்…
எனக்கும்…
உயிருண்டு
உணர்வுண்டு…
வெட்டாதே
எனை மனிதா…
வலிக்கிறது
மிக வலிக்கிறது…

என்ன தவறு
செய்தேன்…
இயற்கையின்
சுழற்சிக்கு…
உறுதுணையாய்
இருக்கின்றேன்…

இனி எனினும்
வெட்டாதே
எனை மனிதா…
இது கூடக்கேட்பது
நான் வாழ அல்ல
நீயும்…உன் சந்ததியும்
நலம் வாழ…

உனக்காகவே நாம்
வாழ்கின்றோம்…
ஆண்டவன் படைத்த
அதிசயம் நான்…
என்னினத்தை
இனியும் அழித்திடாதே…


-----கீர்த்தனா-----

2 comments:

  1. அந்த காட்டு மரங்களை கண்மண் தெரியாமல் வெட்டித் தறிக்கும் அந்த வெட்டுக் கத்திக்களை தட்டிப் பறிக்கிறது.. உங்கள் கட்டுங்கடங்காத கோபம் பட்டுத் தெறிக்கும் இந்த‌ கவிதை வரிகள்!.. மனிதர்கள் மட்டுமல்ல மரங்களும் நேசிக்கும் வரிகள் இவைகள்!.. வாழ்த்துக்கள் தங்கை கீதா!...

    ReplyDelete