
இருள் தழுவிய பூமி…
வானக்கூடையில்
மல்லிகைப்பூக்களாய்
நட்சத்திரங்களின்
ஜொலிப்பு…
சில்லென்ற
தென்றலை
மயிலிறகால்
என் மேற்தடவிய
மரங்கள்...
வீசி நடக்கின்றேன்...
அவளும் நடக்கின்றாள்
என்னோடு…
இளைப்பாற
சிறிது நிற்கின்றேன்...
அவளும் நிற்கின்றாள்
என்னோடு…
ஓடுகின்றேன்
மரங்களை ஊடறுத்து
அவளும் ஓடுகின்றாள்
என்னோடு…
இணைபிரியாத்தோழி
என்றவென்
எண்ணத்தை
தோற்கடித்தது...
அழகாக சிரித்த
வெள்ளி நிலா …
அழகாக சிரித்த
ReplyDeleteவெள்ளி நிலா // படிக்கையில் நானும் சிரித்தேன் :)
MAGIZHCHCHI PIRABU... :)
ReplyDelete