
எனக்கருளும்
கருணை
உனக்குண்டெனின் …
சிறகடிக்கும் வயதில்
எந்தன் சிறகொடித்த
கொடுமைதனை
இன்னொரு
பட்டாம்பூச்சிக்கும்
வழங்கிடாதே
என்னிறைவா ….
இரண்டேயிரண்டு நாள்
நீ நானாகமாறிப்பார்
அப்போது
சொல்லாமலே
உணர்ந்திடுவாய்
என் மனவலியின்
ஆழத்தினை ….
இனியுன்
படைப்பினிலே
தவறிழைக்கமாட்டாய்..
ஊனமென்ற
வார்த்தையின்
ரணம் புரிந்தால்….
அன்றுமின்றுமென்றும்
புரையேறிய
காயம் போல்
திரும்பத் திரும்ப
வலிக்கிறதே
உணர்வுகளால்
என்மனது …
---------கீர்த்தனா-------
உணர்ந்திடுவாய்
என் மனவலியின்
ஆழத்தினை ….
இனியுன்
படைப்பினிலே
தவறிழைக்கமாட்டாய்..
ஊனமென்ற
வார்த்தையின்
ரணம் புரிந்தால்….
அன்றுமின்றுமென்றும்
புரையேறிய
காயம் போல்
திரும்பத் திரும்ப
வலிக்கிறதே
உணர்வுகளால்
என்மனது …
---------கீர்த்தனா-------
No comments:
Post a Comment