கண்ணா உந்தன்
வெண்ணை திருடும்
கண்ணைச் சிமிட்டும்
குறும்புப் பார்வை
கரும்பாய் என்
நெஞ்சை அள்ள...!!
அரும்பாய் மலர்ந்தாய்
சுழிக்கும் சிறு,
மொட்டிதழ் விரித்துப்
புன்னகைப் பூவால்...
தேன்துளி தெளித்துக்
கொள்ளை கொண்டாய்
மாயக் கள்வா!!!!
கரும் நுரை மேகம்
வண்ணமாய் குழைந்து
மென்னுடல் கொண்ட
பூந்தளிர்க் கண்ணா!!
மாந்தளிர்ப் பாதம்
மார்பினில் உதைத்தாய்!!
என் மடிமீதும்
கனவினில் புரண்டாய்
அள்ளி அணைத்து
ஆராரோப் பாடினேன்!!
ஆண்டவன் என் மடி
தூங்கிய பேரின்பத்தில்
கண்மை கசிய
ஆனந்த நீர் பெருக!!!
---கீர்த்தனா---
அழகு... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிகவும் நன்றி தோழரே... :)
Deleteகருமுகில் கண்ணனை
ReplyDeleteகட்டி அணைத்து
அமுதினை ஊட்டி,
ஆராரோ பாடி,
கண்ணா கண்ணாவென
கண்களிலே நீர் சொரிய
கீர்த்தனம் பாடியதால்
கீர்த்தனா எனும் பெயர்
தந்தானோ அந்த
மாயக்கண்ணன். !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
அழகான பின்னூட்டம் சார். மிகவும் நன்றி :)...
Delete