பின்புறம் அணைத்து முகம் புதைத்தேன் - என் மனைத் தேவதை குழற் கற்றை துழைத்து வாசம் நுகர்ந்தேன்... சுவாசம் நிறைத்து!
இன் காதல் மையலிலே மெதுவாகச் சாய்த்தாள் - தன் மென் தேகப் பஞ்சுடலை... இயைவாக எந்தன் நெஞ்சணையில்...
நெற்றிச் சுருளின் நீர்த்திவலை சற்று உருண்டது நாசிதொட்டு - பின் ஒற்றி மகிழ்ந்தது மென்னிதழை - நான் முற்றும் முற்றும் எனை இழந்து சுற்றும் பூமியை மறந்து நின்றேன்...
No comments:
Post a Comment