நெஞ்சினுள்
வாழும்
என்னுயிர்
பாரதி...!
சமூகச்
சாக்கடைகளை
மிதித்தபடி
நடக்கின்றேன்,
மாற்றிடுவேன்
எனும்
நம்பிக்கையில்...!
மந்தைகளாய்
வாழும்
மாந்தர்
மத்தியில்...
மனிதத்தைத்
தேடிய
என் பயணம்!
நல்லவர்
கெட்டவர்
பிரித்தறிவோம்!
வீணர்கள் யாவரையும்
மிதித்திடுவோம்
!
சுயநலம்
கொண்ட மனங்களுக்கு
பொதுநலம்
யாதெனக்
கற்றுத்
தருவோம் !
உன் பக்தையாய் வாழும்
தகுதி
இல்லையென
ஒருகணம்
எண்ணிய
தன்னிரக்கம்
தொலைத்தே...
வீறு கொண்டெழுந்தேன் - இனி
ஏறு போல் நடப்பேன் !!
நீறு பூத்த இலட்சிய நோக்கை
பற்ற வைப்பேன்...பெரு நெருப்பாய்
உன் இலட்சியம் காப்பது ஒன்றே
பெருங்
கடனாய் ....!
---கீர்த்தனா---
No comments:
Post a Comment