Saturday 25 May 2013

எத்தனை ரசங்கள் உந்தன் குரலில்...

சோகத்தில் பிழிய வைத்தாய்!
துள்ளலில் அதிர வைத்தாய்!
காதலில் கனிய வைத்தாய்!
வீரத்தில் நிமிர வைத்தாய்!
பக்தியில் கரைய வைத்தாய்!
எத்தனை எத்தனை ரசங்கள்
உந்தன் குரலில்...
எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்
கந்தன் புகழே எனப் பக்தி ரசம்...
அந்தக் கந்தனும் மனம் குழைந்து
உந்தன் வசம்...
நான் ஆணையிட்டால் அது
நடந்து விட்டால்...கானம்
அது ஏழைகளின் உற்சாக பானம்...
வாழும் வையம் உன் இசையின்
உயிர்ப்பினில்....
வாழ்வாய் நீயும் எம் நெஞ்சின்
இருப்பினில்....
என்றும் சிரஞ்சீவியாய்....

---கீர்த்தனா---

2 comments:

  1. இந்த உலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்... எங்களின் மூத்தவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete