Thursday, 16 May 2013

முதுமைக் காதல்!!!!


தோலணி போர்த்திய
அழகு சுருங்கட்டும்!
ஆடை அலங்காரம்
அனைத்தும் போகட்டும்!

உழைத்த நரம்புகள்
தளர்ந்து போகட்டும்!
மனம் நிறைத்துப் பொங்கும்
நேசத்தின் சாட்சியாய்...
தளர்ச்சியின் பிடியினில்
தொடரும் காதல்...

தளராமல் இறுதிவரை
இறுகக் கைப்பற்றி...
உனக்கு நான்
எனக்கு நீ எனும்
சிறு கை அமுக்கலில்
பெரும் பலத்துடன்
உலகை வெல்லட்டும்
முதுமைக் காதல்!!!!

---கீர்த்தனா---

1 comment:

  1. முதுமை வரை இருந்தால் தான் காதல் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete