Sunday, 1 July 2012

காட்டாற்று வெள்ளமாய்...அன்பு..

பற்றிக்கொள்ளத்
துணையின்றி…
அன்பிற்காய்த்
தவித்து
நிற்கையில்…

வெள்ளைச்
சிரிப்புடன்…
உயிர்த்தோழியே
என்றழைத்து
என்முன்னே
வந்து நின்றாய்…

பற்றிக்கொண்டேன்
கொழுகொம்பாய்…
இன்றென்னன்பின்
அழுத்தம்…உந்தன்
கழுத்தை நெரிக்கும்
பாம்புக்கயிறாய்...

புரிகிறது…வலிக்கிறது
விலகத்தான்
முடியவில்லை
உன்னைப் பிரியும்
ஒரு எண்ணம்
வருகின்ற
கணத்தினிலே…

அனல்மேல்
விழுந்த
பனித்துளியாய்
பொசுங்கித்தான்
போகின்றேன்...
மன்னிப்பாயா
எனை நீயே…

----கீர்த்தனா----

3 comments:

  1. ஆழமான‌ ஒரு நட்புக்கு.. அழுத்தம் கொடுத்து.. ஆராதிக்க‌ வைக்கும் உங்கள் கவிதை வரிகள்.. சிந்தனையை தித்திக்க வைத்து.. மனதை ஆனந்திக்க‌ வைக்கிறது கீதா!.. வாழ்த்துக்கள்!.. தொடருங்கள்!..

    ReplyDelete
  2. MIKAVUM NANDRIKAL ANNAAAAAAAA.. :))

    ReplyDelete
  3. உண்மையான அன்பு எப்போதுமே காட்டாற்று வெள்ளமாய் வருகிறது. அதனால்தான்... அது காயப் படுகிறது. காயப் படுத்துகிறது.

    ReplyDelete