(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Thursday, 6 March 2014
மௌன அம்புகள்...
சின்ன சின்னசந்தோசப் பூக்களையெல்லாம்
உன்னிடமே பிரசவிக்கிறேன்!
ஏனெனில் எனக்காகவெனினும்
இணைந்து சிரிப்பாயென!
துரத்தும் துன்பங்கள்
உன்னிடம் களைகிறேன்!
எனக்காய் கொஞ்சம்
தோள்களில் தாங்கிக் கொண்டு
பஞ்சுப் பொதிகளை
என்னுள் நிரப்புவாயென!
சடுதியில் சில பொழுதில்
மௌன அம்புகள்...
தோழமை நெஞ்சினில்
கூர்மையாய் பாய்ச்சினால்
சுருண்டு தான் போகிறேன்
சுத்தமாய் உயிரிழந்து...
---கீர்த்தனா---
ஓசை
எங்கிருந்தோ பாடும்ஒற்றைப் பூங்குயிலின்
சோகம் இழைந்த பாடல்
சன்னமாக என் காதினில்...
அடர் காடுகளையும்
ஊடறுத்து நீண்டு செல்லும்
நதிமகளின் ஒற்றைப் பயணத்தின்
சலசல ஓசை
சன்னமாக என் காதினில்...
ஆழ் மனதினில்
கரைபுரண்டோடும்
அன்பின் அலையோசை
மென்மையாக என் காதினில்...
எலும்புகள், நரம்புகளை
வலிந்து ஆட்கொள்ளும்
வலியின் காதல் தனை தாங்கா
பட்டாம்பூச்சி உயிரின்
படபடப்பு சிறகடிப்பொலி
வன்மையாக என் காதினில்...
---கீர்த்தனா---
Subscribe to:
Posts (Atom)




