Wednesday, 26 August 2015

மீண்டும் பிறந்து வாருங்கள்...



இற்றைக்கும் அன்னை மாதேவியின் 
வெற்றிடம் நிரம்பவில்லை!

நொந்தவரைத் தாலாட்ட
பொன் நெஞ்சின் தூளியில்லை!

கருணைப் பூவின் இதழ் விரிக்கும்
கரும்புச்சாறுச் சிரிப்புமில்லை!

கரம் விரித்து அள்ளிக்கொள்ளும்
அரவணைப்பும் இங்கு இல்லை!

வாழ்தலுக்கு அர்த்தம் கொடுக்கும்
மானிடர் தரணியிலே பஞ்சம்!

உலகத்துப் பிள்ளைகள் யாவரும்
உன் மடிப் பிள்ளைகள் தாயே...

வரம் கேட்டுத் தவம் செய்கிறோம்
மீண்டும் பிறந்து வாருங்கள் அன்னையே!

---கீர்த்தனா---

11 comments:

  1. வெற்றுக் குமிழிகளாய் விரைந்திடும் வாழ்க்கையில்
    பொற்புச் செல்வி அன்னை தெரேசா நினைவுப் பாடல்
    மிகச் சிறப்பு சகோதரி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அழகு தமிழெடுத்து அன்புடன் வந்து ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றி தோழி!

      Delete
  2. இற்றைக்கும் அன்னை மாதேவியின்
    வெற்றிடம் நிரம்பவில்லை!
    உண்மைதான் அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோதரா!

      Delete
  3. கவிதை அருமை அக்காச்சி இன்னொரு சந்தோஷம் இங்கு இளமதி . முரளி என்று வலையுறவுகளை பார்ப்பது ஆனாலும் யாரும் சொல்லவில்லை கீதா அக்காச்சி!பதிவு போட்டு இருக்கின்றா என்று! அவசர உலகம்!சந்தோஷம் இனி சந்திப்போம் !

    ReplyDelete
  4. உண்மையில் அன்னை போல இன்றுவரை யாரும் இல்லை இனியும் வரமுடியாது என்பதே யாதார்த்தம்!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த அன்பும் நன்றியும் தம்பி... நீங்கள் வலைச்சரத்தில் சொன்னது போல் பின்னூட்டங்கள் மனதுக்கு பெரும் ஊக்குவிப்பே... உங்களதும் சுந்தரி கதிர் அவர்களதும் முன்னர் தேமதுரத் தமிழ் கிரேஸ் அவர்களதும் வலைச்சர அறிமுகங்களுக்கு பின்னர் தோழர்கள், தோழிகள் வருகையும் பின்னூட்டங்களும் உற்சாகம் தருகின்றன... தொடர் உடல்நலக் குறைபாடுகளால் அதிகம் வலைத் தளத்தில் இருக்க முடிவதில்லை. முடிந்த வரை இங்கும் மற்றும் சக பதிவர்கள் பக்கங்களுக்கும் அவசியம் செல்வேன் தம்பி!

      Delete
  5. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    அருமை
    இனி தொடர்வேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி சகோதரா!

      Delete
  6. அன்னையின் வெற்றிடம் நிரம்பவில்லை உண்மை உண்மை! கவிதை அற்புதம். தொடர வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. இனியாவின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!

      Delete