Wednesday 19 August 2015

புன்னகைப்பது நீ தானே

எரித்துக் கொல்லும் அன்பின்
தாகத்தை அணைக்க
ஏரிப்படுகைக் கரையில்
மணிக்கணக்காய்
ஒற்றைத் தவம் நாள்தோறும்...

கரை எங்கிலும்
ரோஸ் வண்ணத்தில்
ஏதோ காட்டுப்பூக்கள்
குவிந்து போய்
காற்றில் சிலிர்த்து சிரித்தன...
கண்ணீரில் கரைந்த கன்னங்களை
உன் கரங்கள் துடைக்கும் வரை
ஜீவமரணப் போராட்டம் உள்ளே
நிகழ்ந்த படியே...


ஓட்டையாய் போன
ஒற்றைப் படகொன்று
நீர் நிரம்பிப் போய்
தேடுவாரற்று கரை ஒதுங்கிக் கிடந்தது...
ஒற்றைப் பறவை ஒன்றின்
கூப்பாடு விட்டு விட்டு ஒலித்தது... 


தென்றல் மட்டும் இதமாய்
தலை கோதிக் கொடுத்தது...
அந்த பூக்காடுகளிடையே
நின்று புன்னகைப்பது நீ தானே
தென்றலாய் தலை கோதியதும் நீதானே...



 ---கீர்த்தனா---

6 comments:

  1. ஒற்றைக்கால் கொக்கைப்போல் ஏதோ ஒரு சோகம் என்னையும் பிடித்துக்கொண்டது படித்து முடிக்கையில் உண்மை தானோ?

    ReplyDelete
    Replies
    1. நமக்குள்ளும் சுற்றி நடப்பவையும் உணர்வின் வெளிப்பாடுகளாக சில வரிகளில்... பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றிங்க தோழி :)

      Delete
  2. தென்றலுக்கு தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றிங்க தோழி :) தென்றல் மிகவும் இதமாக வீசுகிறது.
      பகிர்ந்தமைக்கு நன்றி தோழி..வருகைக்கு அன்புடன் நன்றி :)

      Delete
  3. வணக்கம் தோழி!

    என் வலைத்தளத்தில் உங்கள் வரவு கண்டு தேடி வந்தேன்!
    மிக்க நன்றி தோழி!

    மனதைக் குடைந்தது உங்கள் கவிதை!
    ஒற்றைக் கால் கொக்கின் நிலை ஏனோ உள்ளத்தை வருத்தியது.
    பல சமயங்களில் இங்கும் அதே நிலையே!

    ஆழ்ந்த பொருள்! அழகான கவிதை!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவில் மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் நன்றி தோழி :)

      Delete