Saturday, 30 March 2013

மகிழ்விப்பின் சுவை

உள்ளுக்குள் உணர்வுகள் அழலாம்
உடைந்த மனத்தை கண்ணாடியாய்
உன் முகம் காட்டலாம்...
உன்னுள்ளே புதைத்துக் கொள்,
உணர்வின் காயங்கள் அத்தனையும்...

உனக்கான உன்னைச் சுற்றியிருக்கும்
உன்னத உறவுகள் அனைவரையும்
உடைப்பெடுக்கும் உனதன்பினில் நீந்த வை..
உருவாகும் போது என்ன கொண்டுவந்தோம்?
உருவிழந்து போகும் போது கொண்டு செல்ல..
உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே...
உளமாரப் பிழை பொறுத்து...
உண்மை அன்பின் இலக்கணமாய்...
ஊர் போற்றும் உத்தமராய் நாமெல்லாம்...

---கீர்த்தனா---

அன்பின்,





மகிழ்விப்பின் சுவையே நிலையானது...

Tuesday, 26 March 2013

வளர மனமின்றி...

வானம் விட்டு
இறங்க மறுக்கும்
நிலவை
கை நீட்டி அழைக்கும்
குழந்தையின்
பிஞ்சு மனத்துடன்
அடம் பிடித்தபடி
இன்னும்
வளர்ந்த குழந்தையாய்
வளர மனமின்றி...

---கீர்த்தனா---

Monday, 25 March 2013

கொடுப்பதில் கோடி இன்பம்


Bilde: கொடுப்பதில் கோடி இன்பம்...
*****************************

ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...  

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---
ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்...
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---

Thursday, 21 March 2013

காற்று வெளியிடை....



பிரமாண்டமாய்
இறக்கை விரித்து...
மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து...
சிறிது சிறிதாய் வேகமெடுத்து...

பெருவேகத்துடன் ஓடி ஓடி...
சரக்கென ஓர் உந்தலுடன்...
மேல்நோக்கி மேல்நோக்கி...
காற்று வெளியிடை
மிதந்து மிதந்து...
வான் கடலில் - எம்மையும்
சுமந்து சுமந்து...
நீச்சலடித்தது இயந்திரப்பறவை!

இறக்கை இல்லை
இருப்பினும் பறந்தேன்
தொட்டு விடும் தூரத்தில்
பிறை நிலாக் கண்டேன்!
தொட முடியாத் தூரத்தில்
பூமித் தாய் கண்டேன்!

அள்ளி இறைத்த நட்சத்திரங்கள்
வானிலே வெள்ளிப்பூக்களாய்...
மினுக்கென எரிந்த மின்விளக்குகள்
புவியிலே தங்கப்பூக்களாய்...
தக தகத்த பிறைநிலா
வரைந்து வைத்த ஒளிக்கீற்றாய்...
அண்டசராசரம் முழுவதும்
ஒளிப்புள்ளிகள் நிறைந்து...
விடியலுக்கான கட்டியங் கூறி...

---கீர்த்தனா---

Wednesday, 13 March 2013

எத்தடை வரினும்.....


Bilde: எத்தடை வரினும்.....
*********************
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---

Monday, 11 March 2013

காரிருள்!

மழைக்காலக்
கார்மேகங்களாய்
எண்ணங்களிலும்
காரிருள்!
வண்ணம் பூச
முயல்கிறேன்
வானவில்
நினைவுகளால்
கடந்து சென்ற
இனியவை மீட்டி...

---கீர்த்தனா---

உணர்வுள்ள பொம்மைகளாய்...

பொம்மலாட்டம் ஆடுகின்றோம்...
பொழுதெல்லாம் நாமெல்லாம்...
ஒரு நுனியில் எமைப் பிணைத்து
மறு நுனியைத் தான் பற்றி,
நூலின் அசைவில் அவன் ஆட்டிடும்...
தோலின் அழகணி போர்த்திய
பொம்மைகளாய்....உணர்வுள்ள
பொம்மைகளாய் நாமிங்கு...
மாய உலகின் மாய வலையில்
சிக்கியது புரிந்தும் எதையோ தேடி
உளம் மிக வருந்தி....நிம்மதி
இழப்பில்....உழன்றபடி.....

---கீர்த்தனா---