Monday 25 June 2012

அமரத்துவம் உமக்கேது…

வியக்காத
நாளில்லை…
கவிமழைத்
தேன்துளிகளின்…
சிருஷ்டிப்பின்
இரகசியம்
அறியாமல்...

ஒவ்வொரு

வரிகளும்
சுவைக்க

சுவைக்க...
திகட்டாது

இனிக்கும்
அழகை...

என்னவென்று
சொல்வேன்

நான்…

காதலின்

இன்பம்
ஒருவகை

வண்ணம்…
உமைமிஞ்ச

யாருண்டு
உவமைகளால்
சுவைகொடுக்க...

தத்துவக்

கடலினிலே
மூழ்கி

முத்தெடுத்து…
பாமாலை

தொடுத்த
செல்லக்கவிஞரே…
கண்ணதாசனே…

உமதுபுகழ்
சொல்லிடவே..
வார்த்தைச்
சிறப்பின்றி
தவிக்கின்றேன்

சிறியவள் நான்...

 
உமதுபுகழ்
வாழ்ந்திடுமே...
உலகின்

எல்லைவரை...
வாழ்த்துகின்றேன்
மனமுருகி...
வாழ்ந்திடுவாய்
அமரகவியாய்...   


-----கீர்த்தனா-----

3 comments:

  1. அடடா!. எத்தனை அழகான வார்த்தைகளால் அந்த கண்ணதாசனுக்கு புகழ்மாலை சூட்டி கௌரவித்திருக்கிறீர்கள் கீதா!.. தத்தித் தவழ்ந்து வரும் மென்தென்றலைத் தொட்டு வருகிற‌தோ அந்த வார்தை வரிகள்!.

    ReplyDelete
  2. Very good to enjoy well!
    sivalogan

    ReplyDelete