Saturday 30 June 2012

இரட்டை இதயங்கள்...












கள்ளமில்லா
வெள்ளை
அன்னங்களின்
முத்தமிடலில்…
வரையப்பட்ட
இதயமது…
நீரினிலும்
பளிங்காய்
பிரதிபலிக்க…

இயற்கையன்னை
வரைந்து வைத்த...
இரட்டை இதயங்களின்
அற்புத அழகினை
அள்ளிப்பருகி…

ஒளிச்சிரிப்பினை
வீசியபடியே…
லயித்து நின்றான்
கதிரவனும்…
தன்னிலை மறந்து
சொக்கிப் போய்...

----கீர்த்தனா----
Vis flere

Thursday 28 June 2012

காணாமற் தான் போனேன்...

பொங்கும்
கடல் அலைகள்
ஆர்ப்பரித்து 
எழுவதைப்போல்…

உன் நினைவுகளின்
ஆர்ப்பரிப்பினில்…
மூழ்கித்தான்
போகின்றேன்…

ஆழ்கடலின்
ஆழத்துள்...
அடித்துச்
செல்லப்படும்
சிறுதுரும்பாய்...
காணாமற் தான்
போனேன்
நான்…

-------கீர்த்தனா-------

Wednesday 27 June 2012

மீண்டு வரமுடியாமலே...

எண்ணங்களின்
வெறுமைகளால்                                                
ஒரே வெற்றிடம்…

வெற்று வெள்ளைத்
தாளாய்...எதுவுமே
தோன்றாமல்
மனப்பறவை
சிறகொடிந்தே...

உணர்வுவலைப்
பின்னல்களால்…
எழும் குழப்பங்களின்
கலவைகளால்...
பிரிக்க முடியா
வலிமையுடன்
இறுகிய சிக்கல்கள்...

பற்றிக்கொள்ளத் 
தூணுமின்றி…
இனம் புரியா
ஒரு தவிப்பு…
மீண்டு வர
முடியாமலே...

----கீர்த்தனா----

Monday 25 June 2012

அமரத்துவம் உமக்கேது…

வியக்காத
நாளில்லை…
கவிமழைத்
தேன்துளிகளின்…
சிருஷ்டிப்பின்
இரகசியம்
அறியாமல்...

ஒவ்வொரு

வரிகளும்
சுவைக்க

சுவைக்க...
திகட்டாது

இனிக்கும்
அழகை...

என்னவென்று
சொல்வேன்

நான்…

காதலின்

இன்பம்
ஒருவகை

வண்ணம்…
உமைமிஞ்ச

யாருண்டு
உவமைகளால்
சுவைகொடுக்க...

தத்துவக்

கடலினிலே
மூழ்கி

முத்தெடுத்து…
பாமாலை

தொடுத்த
செல்லக்கவிஞரே…
கண்ணதாசனே…

உமதுபுகழ்
சொல்லிடவே..
வார்த்தைச்
சிறப்பின்றி
தவிக்கின்றேன்

சிறியவள் நான்...

 
உமதுபுகழ்
வாழ்ந்திடுமே...
உலகின்

எல்லைவரை...
வாழ்த்துகின்றேன்
மனமுருகி...
வாழ்ந்திடுவாய்
அமரகவியாய்...   


-----கீர்த்தனா-----

படைத்தல் வித்தை......

படைத்தவனுக்கே
படைத்தல்
வித்தை காட்டும்
அறிவியலாளர்களே…

அழிவுக்குண்டான
படைத்தலைத்தவிர்த்து
ஆக்கத்துக்கும்
வழி செய்யுங்கள்…

படைத்தற்கடவுளரான
உங்களிடம்…
இன்னுமொரு யாசகம்…

ஆராய்ச்சி பண்ணுங்கள்
மனநிம்மதிக்கு மருந்து
உண்டோவென…

வாழும் காலத்திலே
கொஞ்சம் நிம்மதியாக
வாழ்ந்து விட்டுப்
போகின்றோம்…

-------கீர்த்தனா-------

Sunday 24 June 2012

உணர்வின் உருவம்....

கருவறைக்
கோவில்
தெய்வம்...

அன்பினால்
திணறடிக்கும்
அருவிச்சாரல்...

உயிருக்குள்
உயிர்கொடுத்த
படைத்தற்கடவுள்..

வார்த்தைகளில்
சொல்லமுடியா
உணர்வின்
உருவம்.... 

நடமாடும்
தெய்வம்...
அன்னையே
உனக்கு ஈடு
இல்லையே...


----கீர்த்தனா----

எனக்கும்…உயிருண்டு...

அன்பு மனிதா...எனை
வெட்ட முன்னே…
உன்கையில்
போட்டுப்பார்
ஒரு கீறல்…
உன் வலிதான்         
என்னிடமும்…

வளர்கின்றேனே
தெரியவில்லையா…
எனக்கும் உயிர்
உண்டென்பது…
மரமென்று உவமை
சொல்லாதீர்
உணர்வற்ற
மனிதனை…
அது மிகத்தவறு...

புரிந்து கொள்வாய்…
எனக்கும்…
உயிருண்டு
உணர்வுண்டு…
வெட்டாதே
எனை மனிதா…
வலிக்கிறது
மிக வலிக்கிறது…

என்ன தவறு
செய்தேன்…
இயற்கையின்
சுழற்சிக்கு…
உறுதுணையாய்
இருக்கின்றேன்…

இனி எனினும்
வெட்டாதே
எனை மனிதா…
இது கூடக்கேட்பது
நான் வாழ அல்ல
நீயும்…உன் சந்ததியும்
நலம் வாழ…

உனக்காகவே நாம்
வாழ்கின்றோம்…
ஆண்டவன் படைத்த
அதிசயம் நான்…
என்னினத்தை
இனியும் அழித்திடாதே…


-----கீர்த்தனா-----

Saturday 23 June 2012

மழைக்குழந்தை…


சூல்கொண்ட
மேகங்கள்…
சுகமாகப்
பிரசவித்த…இனிய
மழைக்குழந்தை…
பூமித்தாயின்
மடிமெத்தையில்…
செல்லச்சிணுங்கலுடன்…
சுகமாகக்கொஞ்சி
விளையாடும்…
அழகே...அழகு…!

-----கீர்த்தனா-----

Friday 22 June 2012

அன்புத்தோழி…


ஏதோ ஓர் பிணைப்பு…
பார்த்த முதல்
நாளினிலே…
கௌவிப்பிடித்த
பாச உணர்வு…

அன்பு வலைவீசித்
தனக்குள் என்னை
எடுத்துக் கொண்ட
அன்புத்தோழி…
துன்பம் விழுங்கும்
புன்னகை உதடுகள்
அவள் சிறப்பு…

உன் மகிழ்ச்சியை
நீ வைத்துக்கொள்…
துன்பங்களை
என்னிடம் தந்துவிடு
எனும் அவள் பாசம்…
வீழும்போது…
கைகொடுப்பேன்
கலங்காதே என்ற
ஆறுதல் வார்த்தைகள்…

எனக்கே எனக்காய்
அன்பைப்பொழியும்
இனிதான உறவுகளில்…
இன்னோர் உறவாய்
கலந்து விட்டாள்…

என்னுயிர்த்தோழியே
நினைக்கும் தருணம்…
கண்களில் பனிக்கும்
பனித்துளியை…பரிசாய்
உனக்குத்தருகின்றேன்
அன்பாய் அதை நீ
பெற்றுக்கொள்…

எனதினிய அன்புத்தோழியே
நந்தாவிளக்காய் ஒளிவீசி…
இறுதிவரை எனதுகரம்…
பற்றிச்செல்… அன்புக்கும்
அரவணைப்புக்கும்
ஏங்கியே தவிக்கும் உன்
செல்லக்குழந்தை நான்…
-----கீர்த்தனா-----

உருகும் இதயம்...

உருகும்
மெழுகுவர்த்தித்
துளிகளிலும்…
பெருகும் கண்ணீர்த்

துளிகளிலும்...
உந்தன் பிரிவால்

எந்தன் இதயம்...
இரத்தச்சொட்டுகளாய்

உருகி வழியும்…
காட்சியின்

பிரதிபலிப்பை
காண்கிறேன் !!

Thursday 21 June 2012

பகுத்தறிவு எங்கே??

அருவமான
இறைவனுக்கு
பாலாபிஷேகம்…                                       
உருவமுள்ள
குழந்தைக்கு
பசியபிஷேகம்…

மூடநம்பிக்கையில்
மூழ்கிச்சிந்திக்க
மறுக்கும்
பிடிவாத மனிதர்...

சிந்திக்கும் போது
இனந்தெரியாக்கோபம்
பகுத்தறிவு எங்கே
தொலைந்தது…


----கீர்த்தனா----

Wednesday 20 June 2012

துடிக்கும் தமிழ்த்தாய்…

என் தமிழ்த்                                         
தாயின்...
கதறல் இங்கே                                                         
உந்தன் காதில்
கேட்கிறதா…

தன்னுயிர் விழுங்க
ஆங்கிலஅரக்கன்
வருவது கண்டு…
துடிக்கின்றாளே
தெரிகிறதா…

பலமொழி அறிவதில்
பாவமில்லை…
உன் தாய்மொழி
தவிர்ப்பது
பெரும்பாவம்…

இனிக்கும் தமிழை
தவிர்க்கும் தமிழா
உன் நாவினிக்கத்
தமிழ் பேசு…
இனியநாதம் பிறக்கும்
அதில் மூழ்கு…

இனிய தமிழ்விதையே
இன்றே உணர்வாய்…
தமிழ்த்தாய்
உயிரைக் காத்திடும்
கடமை…
உன் வாய்மொழிப்
பேச்சினில்
உண்டென்றே...

-----கீர்த்தனா-----

Tuesday 19 June 2012

வலிகள் மட்டுமே வரமாய்...

வலிகளை
மட்டுமே வரமாய்...
பெற்று வந்த
சிறப்புக்கு
உரியவளோநான்...
திரும்பும்
இடமெலாம் 
முட்களின்
விரிப்பே…
பாதையாகத்
தெரிவதேன்…

புரியவில்லை
எனக்கிங்கு
வலிகள்
மட்டுமே
பரிசாகக்
கிடைக்கும் படி
என்ன தவறு
செய்தேன்…

------கீர்த்தனா------

வெள்ளையுடை தேவதை...

 உணர்வுகளின்
வெப்பத்தில்…
கருகிச்
சருகாகும்…

மலராத
இளவிதவையின்
வயிற்றுக்கு
மட்டுமே…
பசிக்கும்
உணர்வை
அனுமதித்த
சமூகம்…

புரிந்து கொள்ளுமா
வாழ்வுரிமை
அவளுக்கும்
உண்டென்பதை…
என்றேனும்…

----கீர்த்தனா----

சொர்க்கமும் நரகமும்...



சொர்க்கமும்
நரகமும்
மிக மிக
அருகினில்...

உன் வாய்மொழி
கேட்டால்...
சொர்க்கத்தில்

மிதந்தேன்...

நீ வாய்மொழி
தவிர்த்தால்...
நரகத்தில்

துடித்தேன்...

இவ்வளவு
வலிமையா...
உந்தன்

உதட்டின்
அசைவுக்கு...



-----கீர்த்தனா-----




ஏகாந்தமாய் அமர்ந்து...















தங்கச்சூரியனின்
ஒளிக்குழம்பை
உள்வாங்கி…
உருக்கிவார்த்த                                                                                    
பொன்னாய்த்
தகதகக்கும்…
தங்கநீரேரிக்
கரையினிலே…

சிங்காரமாய்
ஒற்றைக்கால்                                                                            
தவமிருக்கும்
வெண்கொக்குகள்
எதற்காகவோ
காத்திருக்க…

அங்குமிங்கும் பறக்கும்
பட்சிகள் எல்லாம்
இதமாய்...மெலிதாய்
இசையெழுப்ப….

காற்றின் தழுவலிலே
குடைவிரித்த
மரங்களெல்லாம்…
மெதுவாக அசைந்தாட…

ஏகாந்தமாய் அமர்ந்து
இயற்கையின் அழகினை
அள்ளிப்பருகினேன்…
படைத்தவனின்
செல்ல இரசிகையாக…

-----கீர்த்தனா-----

Sunday 17 June 2012

விழிநீரால் ஓர் கடிதம்…

விண் சென்ற எந்தைக்கு                                              
விழிநீரால் ஓர் கடிதம்…
அலைபேசியினிலே 
தேனாய் பாயும் குரல்…
கேட்டே நான்
ஓர்வருடம் ஆகிறது…

சிறுவாட்டம் என்றாலும்
அப்பா என்று அழுவேனே…
இதமாக எனையாற்றி
அன்புமழை பொழிவீரே…
ஆறுதல் சொல்லியே

எந்தன் வாழ்வை நகர்த்தி
செல்ல யாருமில்லை
எனக்கின்று…

வலிகள் எல்லாம் ஓர்
முடிச்சாய் இதயக்கூட்டுள்
குவிந்திருக்க கதறியழ
நீங்களின்றி பேதைமனம்
தவிக்கிறதே…

ஒன்றா இரண்டா...
உம்பெருமை எடுத்துசொல்ல…
பிள்ளைகளே உலகமென
வாழ்ந்த கதை
நான் சொல்ல…

இறுதிநாள் அன்றுகூட
அலைபேசியூடாய்
கலங்காதே மகளே
போய் வருகிறேன்
என்ற..உங்கள் குரல்
இன்றும் கூட
காதில் ஒலித்து
உயிர்வலியைத்தருகிறதே...

எந்தையே உமக்கான
வெற்றிடம்..........
யாராலும் நிரம்பவில்லை...
என்னுயிர்த்தந்தையே...
கனத்த இதயத்துடன்
வலிக்கும் உணர்வுகளுடன்
அப்பாக்கள் தினவாழ்த்தை
கண்ணீர்ப்பூக்களுடன்
வானுக்கு அனுப்புகின்றேன்...

----கீர்த்தனா----

Saturday 16 June 2012

வண்ணங்களின் அழகறியாமல்...


இத்தனை அழகாய்
இகமதைப் படைத்து…
ஏன் பறித்தாய்
சிலரிடம் மட்டும்…
அதை இரசிக்கும்
உரிமையை...

பாரபட்சம்
காட்டும் குணம்
மனிதனிடம் வரலாம்...
உன்னிடம் வரலாமா...

வண்ணங்களின்
அழகறியாமல்...
வாழும் அவலத்தை
நீயும் வாழ்ந்து பார்
வலி புரியும் உனக்கும்…

கண்மூடி அரைநாள்
நான் வாழ்ந்து
பார்த்தேன்
கடுங்கோபம் உன்மேல்
ரௌதிரக்காரியாய்...

----கீர்த்தனா----

Friday 15 June 2012

கொன்றுவிடு என்னுயிரை...




மனமதன் குழப்பமே
மரணத்தின் வாசலாய்...
அவ்வாசலின்
திறப்பு விழா
உன்னாலா
நிகழவேண்டும்...

இப்படியென்னுயிர்
துடிக்கும் வலி
கண்டுங்காணாமல்...
எப்படியுன்னால்
பொறுத்துக் கொள்ள
முடிகிறது...

துளி விஷந்தந்து
கொன்று விடு
என்னுயிரை...
தருவது நீயானால்
விஷங்கூட…
அமுதெனக்கு
மரணத்திலென்றாலும்
வாழட்டும் என் காதல்...

----கீர்த்தனா----



உதவும் கரங்கள்








அன்பைப்பரிமாற
நேரமின்றி
உழைப்பதும்
சேமிப்பதும்
வாழ்வெனப்
பறக்கும் மானிடா…
பிறர்நலம்காப்பதும்..
அன்பைப் பகிர்வதும்..
இன்பத்தின்
உச்சமென்பதை
உணர்வாய்......

சேமிப்பு இருப்பதனால்
அறுபதடி நிலத்தில்
புதைக்கப்படமாட்டாய்
மனிதம் காப்போம்
புறப்படு இக்கணம்

------கீர்த்தனா------

உருகிக்கரைந்தேன்…

அன்புக்காதலியே
என்றான்
காற்றினில்
மிதந்தேன்
என்னவளே
என்றான்
எங்கோ
பறந்தேன்
உயிரே என்றான்
உருகிக்
கரைந்தேன்…

உயிரைக்கரைத்தவன்
எங்கோ சென்றான்
உணர்வுச்சிக்கலில்
தவித்து…தேடலில்
தொலைந்து
காத்திருப்பில் கரைந்து...
என்னையே மறந்து
பைத்தியமானேன்…

------கீர்த்தனா-----


போதும் போதும்...











தெளிந்த
நீரோடையில்
கற்களை வீசி வீசி
இது என்ன
விளையாட்டு...

குட்டையாய்
குழம்புகிறது
எந்தன் மனம்...
 

போதும் போதும்
நிறுத்திவிடு
உன் விளையாட்டை...

தாங்கும் சக்தியை
இழந்துவிட்டது
என்னிதயம்...

வெளிச்சப்புள்ளிகளாய்....

இரவினில் மின்னி
வெளிச்சம் காட்டும்                       
மின்மினிப் பூச்சிகள்
போல்…

தடுமாறும்
இருள் மனதில்
வெளிச்சப்புள்ளிகளாய்..
மின்னிப்போகும்
இனியநட்புகளின்
அன்பின் வருடல்கள்..

      
----கீர்த்தனா----

வெடித்திடுமோ...

நினைவுகளின்
சுமையில்...
இதயத்துடிப்பின்
அழுத்தம்…
இரத்தக்கொதிப்பின்
வெப்பம்
திணற வைத்த
சுவாசம்

தாங்க
முடியாதென்
இதயம்...
ஊதிப்பெருகிப்
பருத்து
வெடித்திடுமோ
இக்கணம்

-----கீர்த்தனா​----

Thursday 14 June 2012

ஈழத்தின் விதை


கண்களில்
ஏக்கம்...
அமைதி
இழந்த
நெஞ்சம்...
காற்றை
வெறித்து
ஓர் பார்வை...
சுதந்திரமில்லா
சுவாசக்காற்று...

மரணித்த
உறவுகளின்
வேதனை...
அடிக்கடி
வெளிப்படும்
பெருமூச்சு...
கத்தியால்
கண்டபடி
கீறும் வலி...
அத்தனை
வலி இருந்தும்
வயிற்றை
கிள்ளும் பசி...

வேலையில்லாக்
கொடுமை...
ஒதுக்கி
வைக்கும்
என் இனம்...
இருந்தும்
இன்னும்
வாழ்கிறேன்...
ஓர் நடைப்
பிணமாய்...

-----கீர்த்தனா​----



உன் மூச்சுக்காற்றினிலே...


என்னுயிராய்
ஆனவனே...
உன்னுயிர்
கொண்டு
செல்லாதே
முன் ஜென்ம
பந்தமிது.....
என்னிடமே
வந்து விடு

தரையில்
வீழ்ந்த
மீனாய்...
துடிக்கிறதே
இதயமிங்கு

கண்களின்
நீரூற்று...
நீர்வீழ்ச்சி
ஆகுமுன்னே...
ஊடலதை
விடுத்து
கூடலினால்
அணை கட்டு

உன் மூச்சுக்
காற்றினிலே...
எந்தனுயிர்
உயிர்க்கட்டும்

------கீர்த்தனா-----

வெடித்தெழும் பெருநெருப்பாய்…

அடக்கப்பட்ட
இனமானம்
செந்தணலாய்
அடிநெஞ்சில்...

ஒடுக்கப்படுமா
உணர்வுகள்...
என்றோ
வெடித்தெழும்
பெருநெருப்பாய்…

அன்று தணியும்
சுதந்திர தாகம்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும்
நாளுக்காய்
ஏக்கத்துடன்...

----கீர்த்தனா----

நினைவுப்பொதிகள்













வானத்தில்
மிதக்கும்...
வெண்பஞ்சுக்

கூட்டம் போல்...
விழிகளுக்குள்ளே

மிதக்கிறது...
உன் நினைவுப்

பொதிகள் 
கனவுகளாக...

----கீர்த்தனா----


என்னுயிர் கொண்டு சென்றுவிடு....

கடிவாளம்
இல்லாதமனம்
இழுத்து வைக்க
முடியவில்லை
என்னால்...
 
உன் நினைவுகள்
என் மனதை
ஆளும்போது
ஒரு கணம்
சிலிர்ப்பாய்...
மறுகணம்
தவிப்பாய்...

நீ என்னோடு
பேசிக்கொண்டே
இருக்கவேண்டும்
என்று சுயநலமாய்
பேசவில்லை
என்றால்
கோபமாய்...
இப்படியே
உணர்ச்சிக்
குழம்புகளின்
கலவையாய் 
நான்...

என்னுள் வந்த
பரவசமா நீ
இல்லை என்
உயிர் மெழுகை
உருக வைக்க
வந்த தீக்குச்சியா நீ

என்னுள் உன்னைத்
தேடுகிறேன்
காணவில்லை...
வந்து விடு...
என்னுயிர் கொண்டு
சென்றுவிடு....

 -----கீர்த்தனா​----

நீ இருந்தால் மட்டுமே...


நிர்மலமான வான் பரப்பில் தூவிய
வைரக் கற்களாய் விண்மீன்கள்...
பொன்னிற பஞ்சுப் பொதிக்குள்
தங்கமாய் மின்னும் நிலாமங்கை...

இரவினில் முகிழ் விரித்து...
வாசனை தெளிக்கும் மல்லிப்பூக்கள்
கொடியினிலே நட்சத்திர
ங்ளாய்...
மின்னும் முல்லைப்பூக்கள்!

தென்னோலை உரசல் சலசலப்பில்...
இனிய தென்றல் காற்று....
இத்தனை அழகும்…
என்னருகில் நீ இருந்தால் மட்டுமே...
இரசிக்க தோன்றுகிறது...

----கீர்த்தனா----


காயங்கள்












காற்றினில் வந்த
உன் வாய்மொழித்                                                                       
தாக்குதலால்
பெற்ற காயங்கள்
அதிகம் தான்… 

அதிலிருந்து
மீண்டு வர
மறுக்கும் மனது  
நத்தையாய்
சுருண்டு விட…

அதே வலியுடன்
உன் மனதும்
சுருண்டு கிடப்பதை
உணர்கிறேன் நான்...
முடிவுகள் இல்லா
வாழ்க்கைப்பயணம்
முடிவேயில்லாமல்...

----கீர்த்தனா----

தூரத்து அழகு !

வெண்ணிலவும்
தொலைவில் அழகு...
அருகினில் சென்றால்
பள்ளமும் மேடும்...

விண்மீன்களும்
தூரத்தில் அழகு...
அருகினில்

சென்றால்
சுட்டெரிக்கும்

நெருப்பு...
 

தூரத்தில்
காணும் வரை..
என்னவளும்
அழகுதேவதை

தான்...
 

ருகினில்
கண்டதும் …
குணத்தினை
உணர்ந்ததும் …
எனக்குள் ஒரு
இரகசிய

வினாக்குறி...
இதற்காகவா
தவித்தோம்
துடித்தோம்...


----கீர்த்தனா----

இதயக்கூட்டுக்குள் பொக்கிஷமாய்...













வந்தாய்
சென்றாய்
இனித்தது
வலித்தது...
கொடுத்தவை யாவும்
இதயக்கூட்டுக்குள்
பொக்கிஷமாய்
என்னிடம் மட்டும்
உன்னிடம் எங்கே

என்னுள்
வாழும்
உனக்கான
என் காதல்
நான் மரணித்த
பின்பும்...

------கீர்த்தனா------

ஒற்றைச்சொல்லால் உணர்வைக்கொன்றவனே














தாயன்பு அறியாதே
குழந்தைப் பிஞ்சுகள்                                       
வெதும்பித்தவித்து
உணர்வுகள் சிதைத்து
வாழும் கொடுமை…

அநாதையென்னும்
ஒற்றைச்சொல்லால்
உணர்வைக் கொன்றவனே
இறைவன் என்பவனே...

அவர் தம் வலியுணர்ந்து
வருந்தும் மனிதன்
உனை விட
உயர்ந்தவனோ?
தாயன்பைப்பறித்தவனே
எந்தன்  பார்வைதனில்
என்றும் நீ கொடியவனே..

தவறாயின் மன்னித்திடு
இறைவா….. ஏனெனில்
வலிகள் கண்டால்
துடித்தெழும்
ரௌத்திரக்காரி  நான்..

 உன்னையும்
கேள்வி கேட்பேன்.
நெற்றிக்கண்ணைத்
திறந்திடினும் 
குற்றம் குற்றமேயென
அறிந்தவன்  நீ  தானே…

-------கீர்த்தனா-------