Monday, 11 June 2012

அருவமாகி விடுவேனோ…

இறுமாந்திருந்தேன்
தவறே  
செய்யாதவள்
நானென்று…
பெருமையுடன்
இருந்தேன் ...
அன்பை
வழங்கும்
அரசி என்று …

திமிராக
இருந்தேன்
தவறுகளைத்
தட்டிக்கேட்கும்
பாரதி கண்ட
புதுமைப்பெண்
நானென்று…
எங்கிருந்தோ
வந்தாய்...
அன்புக்கவி
சொல்லி
எனையசைத்த
அந்த சில
நொடியில்...
உனக்குள்ளே
காணாமற்
போனேன்…
தனித்தன்மை
தொலைத்து...
மீண்டு வர
முடியாமல்...
உன்னன்புக்
கடலில்
மூழ்கிக்
கரைந்து
அருவமாகி
விடுவேனோ…

------கீர்த்தனா-----

2 comments:

  1. அண்பை யாரால் தான் வெல்ல முடியும் அக்கா. அண்பை அண்பாலே தான் வெல்ல முடியும். உங்கள் அண்பிற்கு நாங்கள் என்றுமே அடிமை..

    ReplyDelete
  2. miga magizhchchi thambaa naanum unkal ellarathu anpukkum endrum adimai... :)

    ReplyDelete