(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Thursday, 31 October 2013
Tuesday, 29 October 2013
நிலா முற்றம் இடிந்தது!
அன்று ஒரு அழகிய நிலாக்காலம்!இன்முகம் மட்டும் நட்பின் மடியில்!
ஒருவர் துன்பம் ஒருவர் சுமந்து..
ஒருவர் இன்பத்தில் அனைவரும் மகிழ்ந்து!
வரவில்லை எனின் பதைத்து துடித்து!
வந்து விட்டால் பாசத்தில் அணைத்து!
அழகாய் கூடும் நிலா முற்றம் ஒன்று
சங்கம் வளர்த்து ஒன்று கூடி..
நகைச்சுவை பேசி வாய்விட்டு சிரித்து
எழுத்தினில் அவரவர் உணர்வுகள் கொட்டி
கருத்தொருமித்து வாழ்ந்த காலம்
கண்பட்டதோ?? கனவானதோ???
நிலா முற்றம் இடிந்தது!
நிம்மதி தொலைந்தது!
நேசங்கள் பாசங்கள்
இடம் மாறிச் சென்றன!
உள்ளத்தின் குமுறல்கள்
ஊமைக் காயங்களாய்...
காயங்கள் வலித்தாலும்
மயிலிறகாய் வருடும்
அன்புடன் வாழ்ந்த இனிய நினைவுகள்!
--- கீர்த்தனா---
சுட்டு விரல்களுக்குள் அடங்கின..
ஆனந்த விளையாட்டுக்கள் - இன்றுஅடங்கின சுட்டு விரல்களுக்குள்...
துள்ளித் திரிந்த சிட்டுக்கள் - இன்று
அள்ளித் தெளித்தனர் சினத்தை!!!
முல்லைச் சிரிப்பை மறந்து
இருக்கை விட்டு எழ மறுத்து...
கொள்ளை கொள்ளையாய்
சிற்றுண்டி கொறித்தபடி....
கொட்டக் கொட்ட திரையை
உற்றுப் பார்த்தபடி...
விரல்கள் மட்டும் ஓயாமல்
விவரமாய் நர்த்தனமாடியபடி...
--- கீர்த்தனா---
Subscribe to:
Comments (Atom)






