மனமொடுங்கிய குருவி ஒன்றுமரக்கிளையின் ஓரத்திலே...
தனியாக அமர்ந்திருந்து
வியந்து வியந்து பார்த்ததங்கு...
துணிவுகொண்ட குருவிகளின்
திறமைகள் அனைத்தையுமே...
பறக்கும் திறன் அறியாது...
ரௌத்திரக்குருவி ஒன்று
ரௌத்திரம் ஓரம் வைத்து
மெதுவாக நட்புக் கொண்டு
அன்பு கொண்டு மனதை வென்று...
மகிழ்வாக்குவேன் தோழிக்குருவி
புது உலகம் காட்டுவேன் என்று...
இறக்கை நுனி பிடித்திழுத்து
வான் வெளியில் எறிந்ததன்று...
இறக்கை விரி...மேலே மேலே பற என்று!!!
---கீர்த்தனா---
No comments:
Post a Comment